மனைவியைக் கொலை செய்து வீட்டிலேயே புதைத்த கணவன்: ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் கைது

மனைவியைக் கொலை செய்து வீட்டிலேயே புதைத்த கணவன்: ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் கைது

மனைவியைக் கொலை செய்து வீட்டிலேயே புதைத்து விட்டு வேறு நபருடன் ஓடிவிட்டார் என்று கதைகட்டிய கணவன் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் சஜீவ். இவரது மனைவி ரம்யா. இவர் திடீரென காணாமல் போனார். இதையடுத்து கடந்த 2022 பிப்ரவரி மாதம் தனது மனைவியைக் காணவில்லை என ஞாறக்கல் போலீஸில் சஜீவ் புகார் செய்தார். தனது மனைவிக்கும், வேறு நபருக்கும் தொடர்பு இருந்ததாகவும், அவரோடு தனது மனைவி ஓடி விட்டதாகவும் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் சஜீவ் கூறினார். இதையடுத்து ரம்யாவை போலீஸார் தேடி வந்தனர். ஆனால், இந்த வழக்கில் ஒன்றரை ஆண்டுகளாகியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், சஜீவ் மீது போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவரது நடவடிக்கையைக் கண்காணித்தனர். இதன் பின் சஜீவ்வால் ரம்யாவிற்கு ஏதாவது ஆகியிருக்குமோ என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சஜீவ்வை போலீஸார் விசாரணைக்கு உட்படுத்திய போது, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரம்யாவை கொன்று வீட்டிலேயே சஜீவ் புதைத்தது தெரிய வந்தது. அத்துடன் அந்த வீட்டிலேயே அவர் வசித்து வந்ததும் தெரிய வந்தது. கொலை நடப்பதற்கு முன்பு ரம்யா, சஜீவ் இருவரும் போனில் சண்டை போட்டது தெரிய வந்தது. இதையடுத்தே ரம்யாவை சஜீவ் கொலை செய்து புதைத்துள்ளார்.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் சஜீவ்வை போலீஸார் இன்று கைது செய்தனர். ரம்யாக புதைக்கப்பட்ட இடத்தில் போலீஸார் தோண்டி ஆதாரங்களைத் திரட்டினர். மேலும் இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியைக் கொலை செய்த வாலிபரை ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸார் கைது செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in