போதையில் தகராறு; நள்ளிரவில் அரிவாள் தூக்கிய மனைவி: கணவனுக்கு நேர்ந்த துயரம்!

போதையில் தகராறு; நள்ளிரவில் அரிவாள் தூக்கிய மனைவி: கணவனுக்கு நேர்ந்த துயரம்!

குடித்துவிட்டு தினமும் தகராறு செய்த கணவனை அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம், மொழையூர், மண்தாங்கி திடல் பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா(29). இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபோது அவருடன் பணிபுரிந்த திருநெல்வேலி வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த குமார்(36) என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் குமார் தொடர்ந்து குடித்துவிட்டு வந்து போதையில் வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் அதிக அளவு கடன் வாங்கி வீண் செலவு செய்து கடனாளியாக இருந்து வந்துள்ளார். இதனால் கணவன்- மனைவி இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் குமார் வாங்கிய கடனை மயிலாடுதுறையில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து ரம்யா அடைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு குமார் குடிபோதையில் ரம்யா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது போதையில் குமார் தொடர்ந்து தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த ரம்யா அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியிருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரம்யாவைக் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in