மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்: நடத்தை சந்தேகத்தால் நடந்த விபரீதம்

மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்: நடத்தை சந்தேகத்தால் நடந்த விபரீதம்

நடத்தையில் சந்தேகப்பட்டு தம்பெல்ஸால் தலையில் அடித்து மனைவியை கொலை செய்த கணவர் காவல்துறையினரிடம் சரண் அடைந்தார்.

சிவகங்கை மாவட்டம், சூரக்குளம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மார்க் ஆண்டனி (45)-கற்பகம் (40) தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மார்க் ஆண்டனி கர்நாடகாவில் கரிமூட்டம் போடும் வேலை செய்து வந்தார். அவரது குடும்பத்தினர் அனைவரும் சிவகங்கையில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன் சிவகங்கைக்கு வந்த மார்க் ஆண்டனி, தனது மனைவி கற்பகத்தின் நடத்தையை சந்தேகித்துள்ளார்.

இது குறித்து, நேற்று வீட்டில் இருந்த போது கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த மார்க்ஆண்டனி, வீட்டில் இருந்த தம்பெல்ஸை வைத்து மனைவியின் தலையில் அடித்து கொலை செய்தார். தொடர்ந்து, தகவல் அறிந்து நேரில் சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட மார்க் ஆண்டனி, சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மனைவியை கொலை செய்த கணவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in