கோயிலுக்கு மந்திரித்து கயிறு கட்டிய பிறகும் குடித்துவிட்டு வந்த கணவன்: தட்டிக்கேட்ட மனைவிக்கு மகள்கள் முன்பு நேர்ந்த கொடூரம்!

கோயிலுக்கு மந்திரித்து கயிறு கட்டிய பிறகும் குடித்துவிட்டு வந்த கணவன்: தட்டிக்கேட்ட மனைவிக்கு மகள்கள் முன்பு  நேர்ந்த கொடூரம்!

குடியை மறப்பதற்காக கோயிலுக்குச் சென்று கயிறு கட்டிக் கொண்ட நிலையில், மீண்டும் குடித்துவிட்டு வந்த கணவனுடன் தகராறில் மனைவி ஈடுபட்டார். அவரை கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி கற்பகம். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். கருப்புசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில், அதிலிருந்து மீண்டு வருவதற்காக குறிப்பிட்ட கோயிலுக்குச் சென்று மந்திரித்துக் கயிறு கட்டிக்கொண்டு விரதம் இருக்குமாறு குடும்பத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படியே மந்திரித்து கயிறு கட்டிக் கொண்ட கருப்புசாமி, மீண்டும் நேற்று இரவு வீட்டிற்கு குடித்துவிட்டு வந்துள்ளார். இதனால், கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது, தகராறு முற்றவே ஆத்திரமடைந்த கருப்புசாமி வீட்டில் இருந்த கத்தரிக்கோலால் தனது மனைவியின் கழுத்தில் பயங்கரமாக குத்தினார். இதில், கற்பகம் தனது மகள்கள் முன்பாகவே மயங்கிச் சரிந்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை காவல்துறையினர் கற்பகத்தின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கருப்புசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in