குடும்ப பிரச்சினையால் மனைவியை கத்தியால் குத்தினார்: பயத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட கணவர்

தற்கொலை செய்துக் கொண்ட மணிகண்டன்
தற்கொலை செய்துக் கொண்ட மணிகண்டன்குடும்ப பிரச்சினையால் மனைவியை கத்தியால் குத்தினார்: பயத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட கணவர்

சென்னையை அடுத்த ஆவடியில் குடும்ப பிரச்சினையால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு, அச்சத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி பட்டாபிராம் மசூதி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் இதே பகுதியில் சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கெளதமி. தம்பதியினருக்கு இரு மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகன், தாயார் கெளதமியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கத்தியால் குத்தியதில் மனைவி இறந்து விடுவாரோ என்ற அச்சத்தில் கணவன் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in