நடுரோட்டில் பெண் வழக்கறிஞரை எரித்துக் கொல்ல முயன்ற கணவன்: பதற வைக்கும் சம்பவத்தின் பின்னணி

கைது செய்யப்பட்ட அகில்ராஜ்.
கைது செய்யப்பட்ட அகில்ராஜ்.

கேரளாவில் பெண் வழக்கறிஞரை கணவரே பெட்ரோலை ஊற்றி தீவைத்து எரித்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொட்டாரக்கரையருவி நடுவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அகில்ராஜ்(32). வங்கியில் வசூல் முகவராக உள்ள இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஐஸ்வர்யா(26) என்பவரை திருமணம் செய்தார். பெண் வழக்கறிஞரான ஐஸ்வர்யாவுக்கும், அகில் ராஜுக்கும் இடையே கருத்து ஏற்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கிடையே விவாகரத்து தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது

இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் நெடுவத்தூர் அக்ரோ ஜங்ஷன் அருகே டூவீலரில் ஐஸ்வர்யா வந்து கொண்டார். அப்போது அவரை அகில்ராஜ் பின் தொடர்ந்து வந்தார்.

தாமரைசேரிப் பகுதியில் ஐஸ்வர்யாவை அடித்துக் கீழே தள்ளியதுடன் முகத்தில் சில்லி பிஸ்ரேயை அகில்ராஜ் அடித்துள்ளார். இதனால் பயந்து ஐஸ்வர்யா தப்பிக்க முயன்ற போது அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் அவரது தோள், கழுத்து ஆகிய பகுதிகளில் தீப்பற்றி எரிந்தது.

இதைக்கண்ட பொதுமக்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து ஐஸ்வர்யாவைக் காப்பாற்றினர். அத்துடன் அவரை தாலுகா மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில், சம்பவ இடத்தில் இருந்து தப்பிக்கப் பார்த்த அகில்ராஜை அப்பகுதி மக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் குறித்து கொட்டாரக்கரை போலீஸார் கூறுகையில்," குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் அகில்ராஜ் மீது 4 ஆண்டுகளாக வழக்கு நடந்து வருகிறது. பலமுறை அகில்ராஸ் ஐஸ்வர்யாவிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில், தனக்கும், தனது குழந்தைகளும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று ஐஸ்வர்யா வழக்குத் தொடர்ந்துள்ளார். இது தொடர்பான வழக்கில் நேற்று நீதிமன்றத்திற்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவை பெட்ரோலை ஊற்றி அகில்ராஜ் கொலை செய்ய முயன்றுள்ளார். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

நடுரோட்டில் மனைவியை கணவரே தீவைத்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in