என் மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டேன்: போலீஸில் சரணடைந்த கணவன் பரபரப்பு வாக்குமூலம்

என் மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டேன்: போலீஸில் சரணடைந்த கணவன் பரபரப்பு வாக்குமூலம்

உறங்கிக் கொண்டிருந்த தனது மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு காவல் நிலையத்தில் கணவர் சரணடைந்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள அட்டூஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் உதய்சிங். இவர் செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தி வருகிறார். இதில் ஜோதி என்ற இளம்பெண் வேலை செய்துள்ளார். அப்போது அவரை உதய் சிங் காதலித்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு ஜோதியை அவர் திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், தனது மனைவி ஜோதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டதாக சிக்கந்திரா காவல் நிலையத்தில் உதய் சிங் சரணடைந்தார். இதனால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் வீட்டில் சென்று பார்த்த போது ஜோதி இறந்து கிடந்தார்.

இது தொடர்பாக அவரது சகோதர் நிகில் அளித்த புகாரின் பேரில், உதய்சிங்கை போலீஸார் கைது செய்தனர். எதற்காக ஜோதி கொலை செய்யப்பட்டார் என்று போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சிகரமான செய்தி வெளியானது.

ஜோதி ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதைத் தெரிந்து தான் உதய்சிங் திருமணம் செய்துள்ளார். ஆனால், உதய்சிங்கிற்கு ஏற்கெனவே திருமணம் நடந்துள்ளது. அதை ஜோதியிடம் அவர் மறைத்துள்ளார். இதனால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு சண்டை முற்றியதில் ஜோதியின் கழுத்தை நெரித்து உதய்சிங் கொலை செய்துள்ளார். நேற்று போலீஸில் சரணடைந்தார். அவரை போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் ஆக்ராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in