24 மணி நேரமும் இன்ஸ்டாவில் ரீல்ஸ்; கண்டித்த கணவரை மதிக்காத மனைவி: கடைசியில் நடந்த துயரம்

24 மணி நேரமும் இன்ஸ்டாவில் ரீல்ஸ்; கண்டித்த கணவரை மதிக்காத மனைவி: கடைசியில் நடந்த துயரம்

24 மணி நேரமும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு வந்த மனைவியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் கணவர். அந்த அதிர்ச்சி சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். திருப்பூரில் வசித்து வரும் இவர், அங்குள்ள காய்கறி சந்தையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். சோசியல் மீடியாவில் அதிக பதிவுகளை போட்டு வந்துள்ள சித்ரா, டிக் டாக் பிரபலமாக இருந்தார். டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராமில் அதிக ரீல்ஸ் வெளியிட்டு வந்துள்ளார். மேலும் 24 மணி நேரமும் விதவிதமான வீடியோக்களை அவர் வெளியிட்டு வந்ததால் அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது.

இதனிடையே, இன்ஸ்டா ரீல்ஸால் கிடைத்த அறிமுகத்தை வைத்துக் கொண்டு சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னைக்கும் சென்றிருக்கிறார் சித்ரா. இதை எல்லாம் கணவர் அமிர்தலிங்கம் கண்டித்த நிலையில் மகளின் திருமணத்திற்காக திருப்பூருக்கு வந்திருக்கிறார் சித்ரா. அப்போது மீண்டும் சென்னை செல்ல கணவர் எதிர்ப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் கோபமடைந்த அமிர்தலிங்கம், துப்பட்டாவை எடுத்து மனைவி சித்ராவின் கழுத்தை நெறித்து கொலை செய்தார். சித்ராவின் சடலத்தை கைப்பற்றிய போலீஸார் கணவர் அமிர்தலிங்கத்தை கைது செய்தனர். சமூக வலைதள மோகம் ஒரு உயிரையே பலிவாங்கிவிட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in