உறங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி வெட்டிக்கொலை: மீன்பிடிப்பதில் ஏற்பட்ட மோதலால் பயங்கரம்

உறங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி வெட்டிக்கொலை:  மீன்பிடிப்பதில் ஏற்பட்ட மோதலால் பயங்கரம்

மதுரை மேலூரில் கண்மாயில் மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கணவன், மனைவி நள்ளிரவில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஆண்டி கோயில்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கருப்பசாமி. இவரது மனைவி செல்வி. கருப்பசாமிக்கும் இதே ஊரைச் சேர்ந்த மழுவேந்தி, ராஜதுரை ஆகியோருக்கு கண்மாயில் மீன்பிடிப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கருப்பசாமி, செல்வியை மழுவேந்தி, ராஜதுரை இருவரும் சேர்ந்து வெட்டிக்கொலை செய்தனர். இன்று அக்கம் பக்கத்தினர் கணவன், மனைவி கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் ராஜதுரையை கைது செய்தனர். தப்பியோடிய மழுவேந்தியை தேடி வருகின்றனர். கணவன், மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in