திருமணமாகி 17 ஆண்டுகளாக குழந்தை இல்லை: நெல்லையில் கணவன் மனைவி தற்கொலை

திருமணமாகி 17 ஆண்டுகளாக குழந்தை இல்லை: நெல்லையில் கணவன் மனைவி தற்கொலை

நெல்லை மாவட்டத்தில் கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருமணம் முடிந்து 17 ஆண்டுகளாக குழந்தை இல்லாத ஏக்கத்தில் இந்தத் தற்கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகில் உள்ள பழவூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம்(45). இவரது மனைவி ராதிகா(40). வழக்கமாக காலை 5 மணிக்கே வந்து வாசல் தெளித்து கோலம்போட்டுவிடும் ராதிகா இன்று வெகு நேரம் கடந்தும் வீட்டைத் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் அவர்களது உறவினர்களுக்குத் தகவல் சொல்லி வீட்டுக்குள் போய் பார்த்தனர். அப்போது அங்கு கட்டிலில் ராதிகா சடலமாகக் கிடந்தார். அதே அறையின் இன்னொரு பகுதியில் அவரது கணவர் ஆறுமுகம் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்தார்.

இதையடுத்து ராதிகா, ஆறுமுகம் இருவரது உடலையும் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், ஆறுமுகத்திற்கும், ராதிகாவிற்கும் திருமணமாகி 17 ஆண்டுகளாகிறது. ஆனால், அவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. நேற்று இரவும் அப்படி தகராறு ஏற்பட்டு ராதிகா விஷம் குடித்திருக்கலாம். அதைப் பார்த்து அதிர்ச்சியில் ஆறுமுகம் தற்கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இருந்தும், பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்பே இதுகுறித்த முழு விவரங்கள் தெரியவரும் என்று போலீஸார் கூறினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in