திருமணவிழா உணவில் விஷம்... வாந்தி, மயக்கத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

மருத்துவமனையில் அலைமோதிய கூட்டம்.
மருத்துவமனையில் அலைமோதிய கூட்டம்.
Updated on
1 min read

சித்ரதுர்காவில் நடைபெற்ற திருமண விழாவில் நேற்று இரவு உணவு சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா தாலுகாவில் உள்ள கல்கெரே கிராமத்தைச் சேர்ந்தவர் சன்னருத்ரப்பா. இவரது மகள் திருமணம் , ஹெப்பாலா கிராமத்தில் நேற்று நடைபெற்றது. இதற்காக ஹெப்பாலு மடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண விழாவில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்காக திருமண ஏற்பாடுகள் விசேஷமாக செய்யப்பட்டிருந்தது.

சித்ரதுர்கா
சித்ரதுர்கா

இந்த திருமண விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நேற்று இரவு திருமண விருந்து நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருமண வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட அனைவருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டது. பலருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் திருமண வீடே, களேபரமாக மாறியது.

இதையடுத்து திருமண விழாவில் சாப்பிட்டதால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருமண விருந்தில் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

திருவிழாவில் கலந்து கொண்டதால் பாதிக்கப்பட்டவர்கள் பரமசாகர், தாவண்கெரே அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். நல்வாய்ப்பாக இதுவரை உயிர் சேதம் ஏற்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in