மதம் கடந்த மனித நேயம்; திருப்பதி கோயிலுக்கு 1.02 கோடி நன்கொடை: இஸ்லாமிய பக்தர்கள் தாராளம்

மதம் கடந்த மனித நேயம்; திருப்பதி கோயிலுக்கு  1.02 கோடி நன்கொடை:  இஸ்லாமிய பக்தர்கள் தாராளம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்னையைச் சேர்ந்த இஸ்லாமிய பக்தர்கள் ரூ.1.02 கோடி நன்கொடை வழங்கியுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த கபினாபானு, அப்துல் கனி ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று வழிபட்டனர். இதன் பின் கோயிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியிடம் 1.02 கோடி ரூபாய்க்குரிய வரைவோலையை நன்கொடையாக வழங்கினர்.

இந்த தொகையில் அன்னதானத்துக்கு ரூ.15 லட்சமும், பத்மாவதி விருந்தினர் மாளிகை புதுப்பிப்பு பணிக்கு ரூ.87 லட்சமும்,என ரூ.1.02 கோடியை வழங்கினர். மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் ஏழுமலையான் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் நன்கொடை வழங்கிய சம்பவம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in