மின்சாரத்தை எப்படி பயன்படுத்துவது?: சென்னை காவல்துறை ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கை

மின்சாரத்தை எப்படி பயன்படுத்துவது?: சென்னை காவல்துறை ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கை

காவல்துறை அலுவலகங்களில் பயன்பாடு முடிந்து தேவையில்லாத பட்சத்தில் அனைத்து மின்சாதன பொருட்களை முழுமையாக அணைத்து வைக்க காவல் ஆணையர் அனைத்து காவல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அனைத்து காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், "நுகர்வோர் அமைப்பு ஆய்வில் சுமார் 70% பேர் தங்களுடைய வீட்டு உபயோக பொருட்களை முழுமையாக ஆப் செய்யாமல் மின்சார இணைப்பு தொடர்ச்சியாக வரும் வகையில் பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பயன்படுத்தாத மின்சாரத்திற்கும் சேர்த்து கட்டணம் செலுத்தியதும் தெரியவந்துள்ளது.

மின்சாதன பொருட்களின் பிரதான சுவிட்சை அணைக்காமல் இருந்தால் தொடர்ந்து மின்சாரம் நுகர்ந்து கொண்டே இருக்கும். குறிப்பாக ஏசி, டிவி, சார்ஜர் ஆகிய மின்சாதன பொருட்களின் பிரதான சுவிட்சை அணைக்காமல் விட்டால் சுமார் ஆண்டுக்கு 1000 ரூபாய் அளவிற்கு மின்சார கட்டணம் செலுத்த நேரிடுகிறது. தோராயமாக 174 யூனிட் அளவுக்கு மின்சார இழப்பை ஏற்படுத்துகிறது. 174 யூனிட்டை ஒரு ஆண்டு முழுவதும் எல்.இ.டி பல்பை எரியவிட முடியும். 1.5 டன் ஏசியை 116 மணி நேரம் இயக்க முடியும்.

எனவே காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அதிகாரிகள் தங்கள் கீழ் பணிபுரியும் காவலர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கி, தங்கள் அலுவலகத்தில் உள்ள மின்சாதன பொருட்கள் பயன்பாடு தேவைப்படாத நேரத்தில் சரிவர அணைத்து வைக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in