தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுப்பது எப்படி?- கடலில் நடந்த `சாகர் கவச்' ஆப்ரேஷன்

தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுப்பது எப்படி?- கடலில் நடந்த `சாகர் கவச்' ஆப்ரேஷன்

மும்பை தாக்குதல் எதிரொலி கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் பொருட்டு சாகர் கவச் பாதுகாப்பு ஒத்திகை சென்னையில் நடந்தது.

மும்பையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக நுழைந்த தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உட்பட பலர் உயிரிழந்தனர். அதன்பின்பு இந்தியாவின் கடல் எல்லைகளில் தீவிர கண்காணிப்பு வளைத்திற்குள் கொண்டு வந்த மத்திய அரசு கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுவருவலை தடுக்க பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது.

அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 12 கடலோர மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு ஒரு முறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. தீவிரவாதிகள் வேடமிட்டு கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் கடல் வழியாக வந்து நகர்ப்புற பகுதிக்குள் நுழைவார்கள். அவர்களை போலீஸார் கண்காணித்து மடக்கிப்பிடிக்க வேண்டும். இவ்வாறு ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்று காலை தொடங்கிய சாகர் கவாச் ஒத்திகை நாளை வரை நடைபெறும். அதாவது 48 மணி நேரம் சாகர் கவச் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

இந்திய கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழுமம், தொழில் பாதுகாப்பு படை, மத்திய- மாநில உளவு பிரிவு ஆகியோருடன் இணைந்து தமிழக போலீஸார் இந்த ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் கடலோர எல்லைக்குட்பட்ட இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மெரினா காமராஜர் சாலை, துறைமுகம் சாலை, சீனிவாசபுரம் உட்பட பல இடங்களில் பேரிகார்டு அமைத்து போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படகு மூலமாக கடலுக்குள் நுழைந்து தீவிரவாதிகளை கண்டறியும் பணியிலும் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஒத்திகையில் கடல் வழியாக தீவிரவாதிகள் நகரத்திற்குள் ஊடுருவினால், எந்த இடத்தில் குளறுபடி நடந்துள்ளது என்பதை ஆய்வு செய்து அதனை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்படும் என போலீஸ் சார்பில் தெரிவித்துள்ளனர்.

எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகம் அருகே கடல் வழியாக தீவிரவாதிகள் போல் வேடமிட்டு நுழைய முயன்ற 4 பேரை கடலோர காவல்படை மற்றும் போலீஸார் மடக்கி பிடித்துள்ளனர். இதே போல கல்பாக்கம் அனுமின் நிலையத்தை தகர்ப்பதற்காக மீனவர் படகில் தீவிரவாதிகள் போல் வேடமிட்டு வந்தவர்களை கடலோர காவல்படை துரத்தி பிடிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in