ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளவர்கள் மின் இணைப்புடன் ஆதாரை எப்படி இணைப்பது?: மின்வாரியம் விளக்கம்

ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளவர்கள் மின் இணைப்புடன் ஆதாரை எப்படி இணைப்பது?: மின்வாரியம்  விளக்கம்

ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருப்பவர்கள் ஒரே ஆதார் எண்ணை சமர்பிக்கலாம் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஆதார் எண்களை மற்ற அனைத்து வகையான ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போது மின்வாரிய நுகர்வோர் எண்களை ஆதார் எண்ணுடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின் நுகர்வோர் எண்களை ஆதாருடன் இணைப்பதன் மூலம் அரசு வழங்கும் மானியங்கள் முறையாகவும்,சீராகவும் கண்காணிக்கப்பட வசதியாக இருக்கும் என்றும், இதனை மக்கள் www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் செய்து கொள்ளலாம் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் ஒரு சில மின் நுகர்வோர் ஒருவருடைய பெயரிலே இரண்டுக்கும் மேற்பட்ட வீடுகள் அதாவது வாடகை வீடுகளுக்கு மின் இணைப்பை பெற்றுள்ளனர். அதனால் நுகர்வோர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

அதில், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை வைத்திருப்பவர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதேபோல ஒரு வீட்டிற்கு பல மின் இணைப்புகளை நுகர்வோர் வாங்கியுள்ளனர். இவர்கள் ஒரே ஆதார் எண்ணை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே ஆதார் எண்ணை ஏன் அனைத்து இணைப்புகளும் தர வேண்டும் என்று மின் நுகர்வோர்கள் கேள்விக்கு மின்வாரியம் விளக்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வழங்கப்படும் 100 யூனிட் மானிய மின்சாரம் வழங்குவதில் முறைகேடு நடக்கிறது. இதனை சீர்படுத்தவே இவ்வாறு பல இணைப்புகள் கொண்ட மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைக்கும்படி கூறியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் வாடகை வீட்டில் இருப்பவர்கள் அவர்களின் ஆதார் எண்ணை கூட மின் இணைப்புடன் இணைத்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in