தீபாவளியின் கசப்பு பரிசான காற்று மாசு... உங்கள் ஊர் மாசு நிலவரம் உடனே அறிவது எப்படி?

ஆன்லைனில் காற்று மாசு அறியலாம்
ஆன்லைனில் காற்று மாசு அறியலாம்

தீபாவளியின் இனிமையான நினைவுகளுடனே கசப்பான பரிசாக காற்று மாசு என்பது கிடைத்திருக்கிறது. இந்த சூழலில் நம் வசிக்கும் இடத்தின் காற்று மாசு குறித்து அறிந்து கொள்வது அவசியமாகிறது. கையடக்க செல்போனில், சில விநாடிகளில் ஆன்லைன் வாயிலாக இதனை அறிந்து கொள்வது எளிது.

உச்ச நீதிமன்றம் உச்ச கவலை எழுப்பிய பிறகும், அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் காவல்துறை கட்டுப்பாடுகள் நிலவியபோதும், தீபாவளி மகிழ்ச்சியில் மக்கள் எதையில் காதில் ஏற்றியதாக தெரியவில்லை. இதன் விளைவாக நாடு நெடுக கொளுத்திய பட்டாசுகளால் காற்று மாசு கவலைக்குரிய வகையில் அதிகரித்திருக்கிறது. குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் என பலரையும் அச்சுறுத்தக்கூடிய இந்த காற்று மாசு நமது வசிப்பிடத்தில் எந்தளவுக்கு வீரியமாக இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதும் அவசியமாகிறது.

மும்பை - காற்று மாசு
மும்பை - காற்று மாசு

காற்று தரக்குறியீடு (Air Quality Index - AQI) அளவானது காற்றில் தங்கியுள்ள மாசு துகள்கள் (Particulate Matter - PM2.5 மற்றும் PM10), ஓசோன்(O3), நைட்ரஜன் டை ஆக்சைடு(NO2) மற்றும் கார்பன் மோனோ ஆக்சைடு(CO) இவைகளின் உமிழ்வின் அடிப்படையில் அளக்கப்படுகிறது. இந்திய காற்று தரக்குறியீடு விவரங்களை அறிந்து கொள்வதற்காக அதற்கென இருக்கும் பிரத்யேக இணையதளத்தை நாடலாம்.

https://www.aqi.in/ என்ற தளத்தை அணுகி, அதன் மேல் இடது மூலையில் இருக்கும் தேடலுக்கான கட்டத்தில், நமது ஊர் பெயரை ஆங்கிலத்தில் உள்ளிட்டால், காற்று தரக்குறியீடு மற்றும் அதன் பாதிப்பின் வீரியத்தைப் பொறுத்து நன்று, மிதம், மோசம் உள்ளிட்ட விவரங்களையும் உடனடியாக அறிந்துகொள்ளலாம். கூடவே காற்றில் அடங்கியிருக்கும் மாசு துகள்கள், ஓசோன், நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனோ ஆக்சைடு ஆகியவற்றையும் அறிந்து கொள்ளலாம்.

டெல்லி - காற்று மாசு
டெல்லி - காற்று மாசு

உதாரணத்துக்கு இன்று காலை சென்னையில் காற்றின் தரம் ’மோசம்’ என்ற நிலையில் இருந்தது. சில மணி நேரங்களில் ’மிதம்’ என்ற நிலைக்கு முன்னேறி இருக்கிறது. எனினும் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை மாசு அளவைவிட 3.1 மடங்கு மாசு சென்னையில் அதிகரித்தே காணப்படுகிறது. இது தவிர்த்து அப்போதைய காலநிலை குறித்த லைவ் தகவல்களையும் இந்த தளத்தில் அறிந்துகொள்ளலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in