சிக்காமல் இருப்பது எப்படி?- யூடியூப்பை பார்த்து வந்து திருடிய இளைஞர்கள் முதல் முயற்சியிலேயே கைது

யூடியூப்பை பார்த்து வந்து திருடிய இளைஞர்கள்
யூடியூப்பை பார்த்து வந்து திருடிய இளைஞர்கள் சிக்காமல் இருப்பது எப்படி?- யூடியூப்பை பார்த்து வந்து திருடிய இளைஞர்கள் முதல் முயற்சியிலேயே கைது

காவல்துறையிடம் சிக்காமல் நகையை எப்படி திருடுவது என்பதை யூடியூப்பில் பார்த்துவிட்டு திருடிய இரண்டு பேர் காவல்துறை வசமாக சிக்கிக்கொண்ட சம்பவம் திருவள்ளூரில் நடந்திருக்கிறது.

சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் ராதா. இவர் கெருகம்பாக்கத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் ராதாவை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் ராதா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு இரண்டு பேரும் தப்பிச் சென்றனர். இது குறித்து ராதா காவல்துறையிடம் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஹெல்மெட் அணிந்து வந்து இரண்டு பேர் ராதாவிடம் நகையை பறித்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. கடும் சிரமத்திற்கு மத்தியில் மதுரவாயல் மற்றும் நெற்குன்றத்தை சேர்ந்த இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

யூடியூப்பில் வீடியோவை பார்த்து திருட வந்த இளைஞர்கள் முதல் முயற்சியிலேயே கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நகைச்சுவை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in