சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் எவ்வளவு மழை பெய்துள்ளது: முழு விவரம்

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் எவ்வளவு மழை பெய்துள்ளது: முழு விவரம்

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் எவ்வளவு மழை பெய்துள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 29-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. முதல் நாளிலேயே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. 5 நாட்களாக பெய்து வரும் கனமழையால் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். பல இடங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து உள்ளதால் மக்கள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.

இதனிடையே, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. சாலைகள் வெள்ளநீரில் மூழ்கி காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் எவ்வளவு மழை பெய்துள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மாநகராட்சி அலுவலக பகுதி மற்றும் பெரம்பூர் பகுதியில் தலா 17 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியிலும் 17 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது.

சோழிங்கநல்லூர், எம்ஜிஆர் நகர், அம்பத்தூர், அயனாவரம், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 13 சென்டிமீட்டர் மழையும், அண்ணாபல்கலை பகுதியில் 12 சென்டிமீட்டர் மழையும், டிஜிபி அலுவலக பகுதியில் 11 சென்டிமீட்டர் அளவுக்கும் மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் 14.2 சென்டிமீட்டர் மழையும், குமிடிப்பூண்டியில் 13.6 சென்டிமீட்டர் மழையும், தாமரை பக்கத்தில் 8.8 சென்டிமீட்டர் மழையும், சோழவரத்தில் 7.8 சென்டிமீட்டர் மழையும், ஜமீன் கொரட்டூரில் 7.6 சென்டிமீட்டர் மழையும், திருவள்ளூரில் 7.2 சென்டிமீட்டர் மழையும், பூண்டியில் 5.5 சென்டி மீட்டர் மழையும், திருவாலங்காட்டில் 4.8 சென்டிமீட்டர் மழையும், ஆர்.கே.பேட்டையில் 2.3 சென்டிமீட்டர் மழையும். பள்ளிப்பட்டில் 1.2 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in