தமிழகத்தில் இலங்கை தமிழர்கள் எத்தனை பேருக்கு 1000 ரூபாய் ரொக்கம்?

தமிழகத்தில் இலங்கை தமிழர்கள் எத்தனை பேருக்கு 1000 ரூபாய் ரொக்கம்?

தமிழகத்தில் 19,269 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. அரியலூர், தேனி, திருவாரூர் உள்பட 10 மாவட்ட இலங்கை தமிழர்களுக்கு பொங்கல் பரிசு இல்லையென்று கூறப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 2023-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழக முதல்வர் ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 1000 ரூபாய் ரொக்கப் பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் இந்த பரிசு வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக ஜன.2- ம் தேதி முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தைத் தொடக்கி வைக்கிறார். பொங்கல் பரிசு பெற ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்கப்பட உள்ளன.

அதன் படி தமிழகத்தில் 2 கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 73 அரிசி அட்டைதாரர்களும், 19 ஆயிரத்து 269 முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கும் டோக்கன் மற்றும் அதனைத் தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளன. அதன் படி கோவையில் 10.99 லட்சம் அரிசி அட்டைதாரர்களுக்கும், 1089 முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கும் வழங்கப்பட உள்ளன. திருப்பூரில் 7.98 லட்சம் அரிசி அட்டைதாரர்கள், 310 இலங்கை தமிழர்கள், ஈரோட்டில் 7.46 லட்சம் அரிசி அட்டைதாரர்கள், 1377 இலங்கை தமிழர்கள், நீலகிரியில் 2.19 லட்சம் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளன. நீலகிரியில் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர் இல்லை. அதே போல் தமிழகத்தில் அரியலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தென் சென்னை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in