இந்தியாவில் சீட்டா சிறுத்தைகள் அழிந்துபோனது எப்படி? - வெளியான அதிர்ச்சி வீடியோக்கள்

இந்தியாவில் சீட்டா சிறுத்தைகள் அழிந்துபோனது எப்படி? - வெளியான அதிர்ச்சி வீடியோக்கள்

இந்தியாவில் சீட்டா வகை சிறுத்தைகள் 1952 ம் ஆண்டுடன் அழிந்துபோனதாக அறிவிக்கப்பட்டது. இவை எப்படி அழிக்கப்பட்டன என இந்திய வன சேவை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கியுள்ளார்.

நாட்டில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு, நமீபியாவில் இருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட 8 சிறுத்தைகளை, மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலையில் விடுவித்தார். இந்தியாவின் காடுகளில் விலங்குகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சிறுத்தை பரிமாற்றம் உள்ளது.

இந்த நிலையில் ஐஎஃப்எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான், இந்தியாவில் சிறுத்தைகள் அழிந்ததற்கு என்ன காரணம் என்று சமூக ஊடகங்களில் விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்களில், இந்தியாவில் கடைசி சிறுத்தைகள் எவ்வாறு வேட்டையாடப்பட்டன அல்லது வேட்டையாடுபவர்களுக்காக வளர்க்கப்பட்டன என்பதை விளக்கும் வகையில் 1939 ம் ஆண்டு வரையிலான வீடியோ கிளிப்களை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவில், வீடுகளில் சர்வ சாதாரணமாக செல்லப்பிராணிகள் போல சிறுத்தைகள் கட்டிப்போடப்பட்டு வளர்க்கப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளது. மேலும் மாட்டு வண்டிகளில் கண்கள் கட்டப்பட்ட சிறுத்தைகளை ஏற்றிச்சென்று வனப்பகுதிகளில் மான் வேட்டைக்கு பயன்படுத்தும் காட்சிகளும் உள்ளன. மேலும் ஆங்கிலேய அதிகாரிகள், அரச குடும்பத்தினர் காடுகளில் வேட்டையாடிக் கொன்ற சிறுத்தைகளுடன் எடுத்த புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in