அரசு மருத்துவமனையில் 6 வயது சிறுமி உயிர் இழந்தது எப்படி?- மருத்துவக் கல்லூரி டீன் விளக்கம்

அரசு மருத்துவமனையில் 6 வயது சிறுமி உயிர் இழந்தது எப்படி?- மருத்துவக் கல்லூரி டீன் விளக்கம்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் தொற்றால் அனுமதிக்கப்பட்ட ஆறு வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். சிறுமியின் இறப்பிற்கான காரணங்களை தூத்துக்குடி டீன் விளக்கினார்.

தூத்துக்குடி ராஜபாண்டிநகர் பகுதியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். கூலித் தொழிலாளி. இவரது மகள் மகாலெட்சுமி.(6) இவருக்கு கடந்த சில தினங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்துவந்தது. இதனைத் தொடர்ந்து மகாலெட்சுமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சைப் பலனின்றி மகாலெட்சுமி கடந்த 12-ம் தேதி உயிர் இழந்தார். இந்தநிலையில் சிறுமி மகாலெட்சுமி டெங்குவால் உயிர் இழந்ததாக தூத்துக்குடி முழுவதும் தகவல் பரவியது. இதனால் குழந்தைகளின் பெற்றோர் மிகுந்த அச்சத்திற்கும் உள்ளானார்கள். சுகாதாரத்துறையினரும் டெங்கு இல்லை என அச்சத்தைப் போக்க பரப்புரை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில் தூத்துக்குடி டீன் சிவகுமார் இன்று செய்தியாளர்களுக்கு இதுதொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது அவர், “மகாலெட்சுமி என்னும் 6 வயது சிறுமி கடந்த மாதம் 24-ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மிகத்தாமதமாகவே சிகிச்சைக்கு வந்திருந்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து தேவையான மருந்து, மாத்திரைகளைக் கொடுத்து சிகிச்சை அளித்து வந்தோம். நம்மிடம் வரும்போதே குழந்தைக்கு அனைத்து ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. காய்ச்சல் மட்டுமே இருந்தது. குழந்தைக்கு டெங்கு என்பதாக வதந்தி பரவியுள்ளது. அவருக்கு டெங்கு இல்லை. அவர் டெங்கு வார்டிலும் சிகிச்சைப் பெறவில்லை” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in