அதிகாலையில் குலுங்கிய வீடுகள்: நிலநடுக்கத்தால் லடாக் மக்கள் அதிர்ச்சி

அதிகாலையில் குலுங்கிய வீடுகள்:  நிலநடுக்கத்தால் லடாக் மக்கள்  அதிர்ச்சி

லடாக்கில் இன்று அதிகாலையில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் லடாக்கில் அல்ச்சிக்கு வடக்கே 189 கி.மீ. வடக்குப் பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 4.19 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நிலடுக்கத்தின் போது வீடுகள், கட்டிடங்கள் லேசாக குலுங்கின. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனாலும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருளிழப்போ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in