மகளிர் கழிவறையில் பாலியல் வன்கொடுமை... சிறுவனால் அலறிய பெண்: நட்சத்திர ஹோட்டலில் நடந்த கொடுமை

மகளிர் கழிவறையில் பாலியல் வன்கொடுமை... சிறுவனால் அலறிய பெண்: நட்சத்திர ஹோட்டலில் நடந்த கொடுமை

டேராடூனில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஹோட்டலில் உள்ள பெண்கள் கழிவறையில், 15 வயது சிறுவனால் பெண் பராமரிப்பு பணியாளர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

டேராடூனில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஹோட்டலில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 24 வயது பெண் பராமரிப்பு பணியாளர் காலை 9.30 மணியளவில் மகளிர் கழிவறையில் தனது மொபைலில் சார்ஜ் செய்துகொண்டிருந்த போது, அங்கு அத்துமீறி புகுந்த 15 வயது ​​சிறுவன் அந்த பெண்ணிடம் பேச ஆரம்பித்தான். உடனடியாக மகளிர் கழிவறையை விட்டு வெளியேறும்படி அந்த சிறுவனை பராமரிப்பு பெண் எச்சரித்தார். ஆனால், எதிர்ப்பையும் மீறி, குற்றம்சாட்டப்பட்ட சிறுவன் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு, அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். உதவி கேட்டு அந்தப்பெண் சத்தம் போட்ட போதும் கதவு மூடப்பட்டதால் யாரும் கேட்கவில்லை. ஹோட்டலில் பெண்கள் கழிவறையில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சத்தீஸ்கரை சேர்ந்த குற்றம்சாட்டப்பட்ட சிறுவன் கடந்த இரண்டு நாட்களாக அந்த 5 நட்சத்திர ஹோட்டலில் குடும்பத்துடன் தங்கியிருந்ததாகவும், பாதிப்புக்குள்ளான பெண்ணின் புகாரின் அடிப்படையில் சிறுவன் கைது செய்யப்பட்டு ஹரித்வாரில் உள்ள சிறுவர் இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார் எனவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in