பால் பாக்கெட்டில் `ஈ' இருந்த விவகாரம்: ஆவின் அதிகாரி சஸ்பெண்ட்

பால் பாக்கெட்டில் `ஈ' இருந்த விவகாரம்: ஆவின் அதிகாரி சஸ்பெண்ட்

ஆவின் பால் பாக்கெட்டில் `ஈ' இருந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில் அதற்கு கவனக்குறைவாக இருந்த ஆவின் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை ஆவின் நிறுவனத்தில் இருந்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு ஆவின் பால் பாக்கெட் வினியோகம் செய்யப்படுகிறது. இதில் பழநியில் வினியோகம் செய்யப்பட்ட ஆவின் பாக்கெட் ஒன்றில் `ஈ' இருப்பது தெரியவந்தது. இது சமூகவலைதளங்களிலும் வைரல் ஆனது. இதுகுறித்து மதுரை ஆவின் நிறுவனத்திற்கும் புகார்வர, இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஆவின் பாலை பாக்கெட்டில் அடைக்கும் பணியினை மேற்கொண்ட தனியார் நிறுவனத்தின் கவனக்குறைவாலேயே இது நடந்தது தெரிய வந்தது. அந்நிறுவனத்திற்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் பணிக்கு பொறுப்பு அதிகாரியான ஆவின் துணை மேலாளர் சிங்கார வேலு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆவின் பொது மேலாளர் சாந்தி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in