அதிவேகம்... ஆம்புலன்ஸ், மூன்று கார்கள் மீது மோதிய கார்: 5 பேர் பலி; 8 பேர் படுகாயம்!

அதிவேகம்... ஆம்புலன்ஸ், மூன்று கார்கள் மீது மோதிய கார்: 5 பேர் பலி; 8 பேர் படுகாயம்!

மும்பையில் இன்று அதிகாலை நடந்த கொடூர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பையில், பாந்த்ரா - வர்லி ஸீ - லிங்க் கடல் பாலத்தில் இன்று காலை 3.30 மணி அளவில், அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று, மூன்றுக்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் 13 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 5 பேர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தப் பாலத்தில் பாந்த்ராவிலிருந்து வர்லி செல்லும் பாதையில், முன்னதாக ஒரு விபத்து நிகழ்ந்திருந்தது. இதனால், அந்தப் பகுதியின் ஓரத்தில் சில கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதில் காயமடைந்தவர்களை ஏற்றிச்செல்ல ஆம்புலன்ஸும் அங்கு வந்திருந்தது. அந்த நேரத்தில், அதிவேகத்தில் சென்ற கார் அந்தக் கார்கள் மீதும் ஆம்புலன்ஸ் மீதும் மோதியதில் இந்தக் கொடூர விபத்து நிகழ்ந்திருக்கிறது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி, பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

அந்தக் காரை ஓட்டிச் சென்றவர் மது அருந்தியிருந்தாரா எனும் கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. இந்த விபத்தைத் தொடர்ந்து, பாந்த்ராவிலிருந்து வர்லி செல்லும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வேண்டும் எனப் பிரார்த்திப்பதாகவும் ட்வீட் செய்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in