அதிவேகமாக வந்த சொகுசுப் பேருந்து டிரக் மீது மோதி தீப்பிடித்தது: உடல் கருகி 14 பயணிகள் பலி

அதிவேகமாக வந்த சொகுசுப் பேருந்து டிரக் மீது மோதி தீப்பிடித்தது: உடல் கருகி  14 பயணிகள்  பலி

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் டிரெய்லர் டிரக் மீது அதிவேகமாக வந்த சொகுசு பேருந்து மோதி தீப்பிடித்தது. இதில் 14 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கிழக்கு மகாராஷ்டிராவில் உள்ள யவத்மாலில் இருந்து சொசுகு பேருந்து இன்று அதிகாலை நாசிக்-அவுரங்காபாத் நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது புனே நோக்கிச் சென்ற டிரெய்லர் டிரக் மீது பேருந்து திடீரென மோதி தீப்பிடித்தது. இதில் பேருந்தில் இருந்த 14 பயணிகள் தீயில் கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 38 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் நாசிக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் நிலைக்கவலைக்கிடமாக உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "நாசிக்கில் நடந்த பேருந்து விபத்தால் வேதனையடைந்துள்ளேன். பேருந்து தீ விபத்தில் இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 லட்ச ரூபாய் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்முவும் இரங்கல் தெரிவித்துள்ளார் . மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in