பொங்கல் படையலிட்டு நாட்டியக்குதிரைகளுக்கு மரியாதை

பொங்கல் படையலிட்டு நாட்டியக்குதிரைகளுக்கு மரியாதை

மாட்டுப்பொங்கல் விழாவையொட்டி, ராமநாதபுரம் அருகே நாட்டியக்குதிரைகளுக்கு பொங்கல் வைத்து அதன் உரிமையாளர்கள் மரியாதை செலுத்தினர்.

உழவுக்கும், உழவருக்கும் உதவிய மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடும் வேளையில், சிலர் தங்கள் வீடுகளில் வளர்க்கும் ஆடுகளுக்கு பொங்கல் வைத்து கொண்டாடினர். இதன் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் அருகே நாட்டிய குதிரைகளுக்கு பொங்கல் வைத்து நன்றி செலுத்திய நிகழ்வு அப்பகுதி மக்களை ஈர்த்துள்ளது.

ராமநாதபுரம் அருகே பனைக்குளம் பகுதியில் வளர்க்கப்படும் நாட்டியக்குதிரைகள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் திருமணங்கள், முளைப்பாரி விழா உள்ளிட்ட விழாக்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றன. தங்களுக்கு ஆண்டு முழுவதும் வருவாய் ஈட்டித்தரும் நாட்டியக்குதிரைகளை கவுரவிக்கும் விதமாக, அவற்றை வளர்ப்பவர்கள் பொங்கல் வைத்து மரியாதை செலுத்தினர்.

தங்கள் இல்லங்களில் மிகுந்த காட்டி வளர்த்து வரும் நாட்டியக்குதிரையை ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டி, ஆபரணங்கள் அணிவித்து, அலங்காரம் செய்து கோலாகலமாக ஊருக்குள் அழைத்து வந்தனர்.

அங்கு அமைக்கப்பட்டிருந்த விழா பந்தல் முன் பேன்ட் வாத்திய இசைக்கேற்ப நாட்டியக்குதிரை தங்கள் பின்னங்கால்களை தரையில் ஊன்றி உடல் முழுவதையும் மேலே நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது. இதன் பின் படையலிட்ட பொங்கல், வாழைப்பழம் குதிரைகளுக்கு வழங்கப்பட்டது. இதன் பின்னர், பொதுமக்களுக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in