
ஹாங்காங் மாடல் அழகியை துண்டுதுண்டாக வெட்டி உடல் பாகங்களை ஃப்ரிட்ஜில் வைத்த கணவர், மாமனார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹாங்காங்கைச் சேர்ந்தவர் மாடல் அழகி கெவிட் ஜாய். இவர் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இந்த நிலையில் அவரது உடல் பாகங்களை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். தாய்கோ மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் துண்டிக்கப்பட்ட நிலையில் கால்கள் கண்டெடுக்கப்பட்டது. தலை மற்றும் உடல் பாகங்களை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் கொலையாளிகளைப் பிடிக்க காவல்துறையின் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் சொத்துக்காக மாடல் அழகியான தனது மனைவியை கணவர் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மாடல் அழகியின் கணவர் மற்றும் உடந்தையாக இருந்த அவரது சகோதரர், மாமனார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஹாங்காங் மாடல் அழகி துண்டுதுண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.