வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் வெட்டிக்கொலை: திருமணத்தை மீறிய உறவால் நடந்த கொடூரம்

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் வெட்டிக்கொலை: திருமணத்தை மீறிய உறவால் நடந்த கொடூரம்

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக அவருடன் திருமணத்தை மீறிய தொடர்பில் இருந்த வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள பர்கானா பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சன் கசேரா. இவரது மனைவி மம்தா தேவி(26). இவர்கள் பத்வதந்த் என்ற இடத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் மம்தாதேவி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். மற்றவர்கள் வெளியூர் சென்றிருந்தனர். நேற்று இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது மம்தா தேவி அரிவாளால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதனால் அவரது கணவன் உள்பட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து மம்தா தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கடந்த ஒரு வருடமாக ஹசாரிபாக் பகுதியைச் சேர்ந்த அர்மான்கான் என்ற ராக்கி பாபாவுடன் மம்தா தேவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர். சம்பவம் நடந்த நாளில், மம்தா தேவி வீட்டிற்கு அர்மான்கான் வந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மம்தாதேவியை அர்மான்கான் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அர்மான்கான் மீது வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in