தூத்துக்குடி மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மீனவர்களுக்கு எச்சரிக்கை

தூத்துக்குடி மாநகராட்சி
தூத்துக்குடி மாநகராட்சி

'மேன்டூஸ்' புயல் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்திலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மையம் வட மாவட்டங்களில் 'மேன்டூஸ்' புயல் எச்சரிக்கையோடு மட்டுமல்லாது, தென்மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கையும் கொடுத்திருந்தது. அதிலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பலத்த காற்றும் வீசிவருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்ட மீனவர்களுக்கு மறு உத்தரவு வரும்வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என மீன் வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இன்று மூன்றாவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. தூத்துக்குடி துறைமுகத்திலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதனிடையே தூத்துக்குடியில் நிலவும் வானிலை மாற்றம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பிறப்பித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in