தொடர் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: திருப்பத்தூர் கலெக்டர் அறிவிப்பு

தொடர் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: திருப்பத்தூர் கலெக்டர் அறிவிப்பு

கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. பல இடங்களிலும் நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விவசாயப் பணிகளிலும் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதற்கேற்ப நேற்று இரவு முதலே திருப்பத்தூர் மாவட்டத்தில் பல இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.  இதனால் பல பகுதிகளிலும் நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக  பாதிக்கப்பட்டுள்ளது. 

அதனையடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக  மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று செவ்வாய்க்கிழமை (11-ம் தேதி) ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது" என்று  தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in