இடைவிடாத கனமழையால் பள்ளிக்குப் போக வேண்டாம்: எந்தெந்த மாவட்டங்களுக்கு இந்த அறிவிப்பு தெரியுமா?

இடைவிடாத கனமழையால் பள்ளிக்குப் போக வேண்டாம்:  எந்தெந்த மாவட்டங்களுக்கு இந்த அறிவிப்பு தெரியுமா?

தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் தேனி, நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை பெறாத மாவட்டமான திருவாரூர் மாவட்டத்திலும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக தென்மேற்கு பருவமழை காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் அதிக மழை பெறுவது வழக்கம். அதனால் அப்பகுதியில் உள்ள மாவட்டங்களில் பள்ளிகளுக்கு ஒருமுறை விடப்படுவது வாடிக்கை. ஆனால் இந்த முறை தென்மேற்கு பருவமடை காலகட்டத்தில் டெல்டா மாவட்டங்களிலும் வழக்கத்திற்கு மாறாக கனமழை கொட்டி வருகிறது.

புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் வழக்கத்திற்கு மாறாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இடைவிடாத தொடர் கனமழையால் தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழையால் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in