ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

இந்திய ஹாக்கி அணி
இந்திய ஹாக்கி அணி

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. மொத்த போட்டி தொடரும் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான கோப்பையும், சின்னமான பொம்மனும் கடந்த 21ம் தேதி, தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நல மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில், போட்டி தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்த அணியில் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், கிருஷ்ண பகதூர் பதக், சுமித், ஜூகராஜ் சிங், ஜர்மன்ப்ரீத் சிங், வருண் குமார், அமித் ரோஹிதாஸ், ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத், மன்ப்ரீத் சிங், நீலகண்ட ஷர்மா, ஷம்சீர் சிங், அகஷ்தீப் சிங், மந்தீப் சிங், குர்ஜந்த் சிங், சுக்ஜீத் சிங் மற்றும் கார்த்திக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அணி தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள பயிற்சியாளர் கிரேய்க் ஃபுல்டன் இந்த தொடரில் வெல்வதற்கு தகுதி வாய்ந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியா 3ம் தேதி தனது முதல் லீக் போட்டியில் சீனாவையும், 9ம் தேதி நடைபெறும் கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானையும் எதிர்கொள்கிறது. இந்த தொடரில் வெல்லும் அணி 2024ம் ஆண்டு பாரீசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in