20 கொலை, கொள்ளை வழக்குகள்... பிணையில் வந்த ரவுடி படுகொலை: மகன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பயங்கரம்!

20 கொலை, கொள்ளை வழக்குகள்... பிணையில் வந்த ரவுடி படுகொலை: மகன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பயங்கரம்!

பிணையில் வெளிவந்த பிரபல ரவுடியை கத்தியால் குத்தியும், அறிவாளால் வெட்டியும் கொலை செய்த சம்பவம் மதுரை மேலவாசல் பகுதியில் அரங்கேறியுள்ளது.

மதுரை மாநகர் மேலவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபமணி (32). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் மதுரை மாநகரில் உள்ள காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து பிணையில் வெளி வந்த ஜெபமணி மேலவாசலில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

கொலை செய்யப்பட்ட ஜெபமணி
கொலை செய்யப்பட்ட ஜெபமணி

இந்தநிலையில், நேற்று தனது மகனின் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிவிட்டு, பின்னர் இரவு 10 மணி அளவில் மது அருந்திவிட்டு வீட்டின் அருகே உள்ள கடையில் அமர்ந்திருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் மூன்று பேர், ஜெபமணியை கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர்.

இது குறித்து, தகவல் அறிந்த திடீர்நகர் காவல்துறையினர் விரைந்து வந்து ஜெபமணியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்த காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in