`உங்கள் நடவடிக்கை எங்களை கட்டுப்படுத்தாது'- இந்து அறநிலைத்துறைக்கு தீட்சிதர்கள் காட்டமான கடிதம்

`உங்கள் நடவடிக்கை எங்களை கட்டுப்படுத்தாது'- இந்து அறநிலைத்துறைக்கு தீட்சிதர்கள் காட்டமான கடிதம்

சிதம்பரம் நடராஜர் கோயில் கணக்கு வழக்கு தொடர்பான விவரங்களை நவம்பர் 15 -ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்ற இந்து சமய அறநிலையத்துறையின் கடிதத்திற்கு. ``இந்து அறநிலையத்துறையின் நடவடிக்கைகள்  எங்களை கட்டுப்படுத்தாது'' என சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் திட்டவட்டமாக  மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்து அறநிலையத்துறை ஆணையர் ஜே.குமரகுருபரன், நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்திற்கு, நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் சி.எஸ்.எஸ்.ஹேமசபேச தீட்சிதர் நீண்ட மற்றும் விளக்கமான அனுப்பியுள்ள பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த அந்த கடிதத்தில், ``இந்து சமய அறநிலையத்துறை செயலாளரும், ஆணையருமான தாங்களும் வெளியிட்ட  பல்வேறு தகவல் தொடர்புகள், உத்தரவுகள், கோரிக்கைகள்  போன்றவற்றில் இருந்து   இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தின்  25,26 மற்றும் 29(1) விதிகளை மீறி, தமிழகத்தின் 107வது பிரிவை  முற்றிலும் மீறி, சிதம்பரம் நடராஜர் கோயில்  நிர்வாகத்தை  எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என அறநிலையத்துறை முன் வந்துள்ளது தெரிகிறது.

இந்து சமய மற்றும்  அறநிலைய அறக்கட்டளைச் சட்டம், 1959 (இனி 1959 சட்டம்) மற்றும்  சென்னை உயர் நீதிமன்றம் மற்றும்  இந்திய உச்ச  நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சின் உத்தரவுகளை அவமதிக்கும் வகையில் இது உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின்  டிவிஷன் பெஞ்ச் வழங்கிய  தீர்ப்பின்படி, இந்து அறநிலையத்துறை மற்றும் அல்லது அதன்  ஆணையர்  ஒரு சமயக் கோயிலின்  கணக்குகளை வழக்கமான விஷயமாக தரும்படி கேட்க முடியாது. 

எனவே, 07.06.2022 மற்றும் 08.06.2022  அன்று அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்த போது,  பொது தீட்சிதர்கள் ஒத்துழைக்கவில்லை என்று நீங்கள் மீண்டும் மீண்டும்  கூறிய குற்றச்சாட்டில் எந்தத் தகுதியும் இல்லை.   இந்திய உச்சநீதிமன்றம், சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களின்  குலத்துக்குச் சொந்தமான சொத்து என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேற்கண்ட உத்தரவு எதிராக தமிழக அரசு  செய்த மேல்முறையீடு, இந்திய உச்ச நீதிமன்றத்தின் அரசியலைமப்பு பெஞ்சால் தள்ளுபடி செய்யப்பட்டது. 

தீட்சிதர்கள், கோயில் நிர்வாகத்திலோ அல்லது  வழிபாட்டிலோ அல்லது கடவுளுக்குச் செய்யும் சேவைகளிலோ  பங்கேற்க உரிமை உண்டு. இது அவர்களின் பிரத்தியோக மற்றும்  சிறப்புரிமையாகும். கோயில் பூஜைகள் மற்றும் பராமரிப்புக்கான நிதி  மற்றும் பொருட்களின் ஆதாரங்களை தெளிவாக பதிவு செய்துள்ளது.   

2000 ஆண்டுகளுக்கும் மேலாக மண்ணின் மைந்தர்களாக விளங்கும்  பண்டைக்கால நுண் சமூகத்தைச் சேர்ந்த பொது தீட்சிதர்களாகிய நாங்கள்  இச்சமூகத்தின் அடிப்படை சமய, நிர்வாக மற்றும் கலாச்சார உரிமைகளை  பாதுகாக்குமாறு அரசாங்கத்திடமும் அதன் முதன்மை அதிகாரிகளிடமும்  கோரிக்கை விடுக்கின்றோம்.  இந்த அறிவிப்பு மற்றும் பதில் கடிதங்களை  உங்கள் துறையுடன் தொடர நாங்கள் விரும்பவில்லை. நடராஜர் கோயில் நிர்வாகத்தில் நீங்கள் சட்டத்திற்கு புறம்பாக ஏதேனும் நடவடிக்கை  எடுத்தாலோ அல்லது ஏதேனும் உத்தரவை  பிறப்பித்தாலோ முதலில் அது எங்களை  கட்டுப்படுத்தாது,  இரண்டாவதாக அது நீதிமன்ற அவமதிப்புக்கு பொறுப்பாகும்.   எங்கள் வழக்குரைஞர்களின் சட்ட ஆலோசனை  பெற்ற பிறகு, உங்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புக்கான சட்ட  நடவடிக்கைகளை  நாங்கள் தொடங்குவோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in