பகீர் வீடியோ... கொத்து கொத்தாய் சரிந்து விழுந்த குடியிருப்புகள்! இமாச்சலில் சோகம்!

பகீர் வீடியோ... கொத்து கொத்தாய் சரிந்து விழுந்த குடியிருப்புகள்! இமாச்சலில் சோகம்!

இமாச்சல பிரதேசத்தில் குடியிருப்புகள் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவரையும் உறைய வைத்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடைவிடாத கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள், மேக வெடிப்புகள் மற்றும் திடீர் வெள்ளம் ஆகியவற்றால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.

மழை நீடிப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குல்லு மாவட்டம் அன்னி நகரில் இன்று கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த வீடுகள் சீட்டு கட்டுக்களைப் போல் சரிந்து விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே இமாச்சல பிரதேசத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in