ஹிஜாவு நிறுவனத்தால் ஏமாந்தவர்கள் போராட்டம்
ஹிஜாவு நிறுவனத்தால் ஏமாந்தவர்கள் போராட்டம் 30 பேர் தற்கொலை செய்துள்ளனர்; நாங்களும் அந்த முடிவுதான் எடுக்கப்போறோம்: ஹிஜாவு நிறுவனத்தால் ஏமாந்தவர்கள் கொந்தளிப்பு

30 பேர் தற்கொலை செய்துள்ளனர்; நாங்களும் அந்த முடிவுதான் எடுக்கப்போறோம்: ஹிஜாவு நிறுவனத்தால் ஏமாந்தவர்கள் கொந்தளிப்பு

ஹிஜாவு நிறுவன இயக்குநர்களை கைது செய்து, முதலீடு செய்த பணத்தை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்டோர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்டு வந்த ஹிஜாவு நிறுவனம் ஒரு லட்சம் முதலீடு செய்தால் 15 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறி மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களிடமிருந்து 800 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெற்று மோசடியில் ஈடுபட்டது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சௌந்தரராஜன் கடந்த வாரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து இந்நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பலர் இன்று அசோக்நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் முன்பு ஒன்று கூடி இந்நிறுவனத்தின் இயக்குநர்களை உடனடியாக கைது செய்து தாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்றுத்தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட தனலட்சுமி, "தமிழகம் முழுவதும்

இந்நிறுவனத்தை நம்பி முதலீடு செய்த சுமார் 30 பேர் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். உடனடியாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் இழந்த பணத்தைப் பெற்று தரவில்லை என்றால் தாங்களும் அந்த முடிவுக்கு செல்லவேண்டிய சூழல் ஏற்படும். ஹிஜாவு நிறுவன இயக்குநர்களை உடனே கைது செய்து, முதலீடு செய்த பணத்தை மீட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி தரவேண்டும்" என்று கூறினார்.

இதேபோல் நேற்று ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட பலர் தங்களது பணத்தை மீட்டு தரக்கோரி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in