ஒடிசா ரயில் விபத்து; உயர்மட்ட விசாரணை கோரி பொதுநல வழக்கு!

ஒடிசா ரயில் விபத்து
ஒடிசா ரயில் விபத்து

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒடிசாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த கோரமான ரயில் விபத்தில் 294 பேர் உயிரிழந்த சம்பவம் உலக நாடுகளை அதிச்சிக்குள்ளாக்கியது. மீட்பு பணிகள் தொடர்ந்து வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியும் நடந்து வருகிறது. பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் சிதைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கோரமான விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியை சேர்ந்த விஷால் திவார் என்ற வழக்கறிஞர் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த விசாரணை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நடத்தவும், அந்த விசாரணையினை இரண்டு மாதங்களுக்குள் முடித்து அதன் அறிக்கையினை தாக்கல் செய்ய உத்தரவிடவும் கோரப்பட்டுள்ளது.

மேலும் எதிர்காலங்களில் இது போன்ற விபத்துகள் நேராமல் இருக்க கவாச் பாதுகாப்பு முறையினை அனைத்து பகுதி ரயில் வழித்தடங்களிலும் ஏற்படுத்தவும் இந்த பொதுநல மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு உச்சநீதிமன்றத்தால் நாளை ஏற்கப்பட்டு, விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in