
மனைவியிடம் முறையான விவாகரத்து பெறாது இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்வது என்பது, லிவ் - இன் உறவு வகையில் சேராது என பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.
பஞ்சாப்பை சேர்ந்த ஆண் - பெண் ஜோடி தங்களது லிவ் - இன் உறவுக்கு, பெண்ணின் குடும்பத்தாரால் அச்சுறுத்தல் எழுந்திருப்பதாகவும், அவர்களிடமிருந்து பாதுகாப்பு கோரியும் நீதிமன்றத்தை அணுகினர். பஞ்சாப் - ஹரியானா மாநிலங்களின் உயர் நீதிமன்றத்தில் இவர்களின் வழக்கு விசாரணைக்கு வந்தது.
குல்தீப் திவாரி தலைமையிலான தனிநபர் அமர்வு, இவர்களின் வழக்கை விசாரித்தபோது அதிர்ச்சியை பதிவு செய்தது. ஏனெனில், லிவ்-இன் உறவில் இருக்கும் பெண் திருமணமாகாதவர் என்ற போதும், ஆண் ஏற்கனவே திருமணமானவர். குடும்ப பிரச்சினையில் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்தபோதும், 2 குழந்தைகளின் தந்தை அவர்.
”முதல் மனைவியுடன் முறைப்படி விவாகரத்து செய்யாது, தனது தனிப்பட்ட இச்சைக்காக இன்னொரு பெண்ணை நாடி இருப்பதும், அதனை லிவ்-இன் உறவில் சேர்ப்பதும் முறையாகாது. மனைவியுடன் விவாகரத்து பெறாது இன்னொரு பெண்ணுடன் தனிப்பட்ட வாழ்க்கை வாழ்வது இந்திய தண்டனைச் சட்டம் 494/495 பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். எந்த வகையிலும் இருவரின் உறவையும் திருமணத்துக்கு நிகரான 'லிவ்-இன் ரிலேஷன்ஷிப்' அல்லது 'ரிலேஷன்ஷிப்' என்பதில் சேர்க்க முடியாது” என்று கூறி அவர்களின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதையும் வாசிக்கலாமே...
சிவகாசி : தீபாவளிக்கு ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை!
நாளை தெறிக்கப் போகுது தமிழகம்... 234 தொகுதிகளில் 8,647 கி.மீ தூரம் திமுக வாகனப் பேரணி!
பனிக்குடம் உடைந்து கதறிய கர்ப்பிணி: 108 ஆம்புலன்ஸில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!
இடுப்பளவு நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: தொடர் மழையால் விவசாயிகள் கண்ணீர்!