பட்டாக்கத்தியுடன் அச்சுறுத்திய ‘ரூட் தல’ மாணவர்: அதிரடி காட்டிய உயர் நீதிமன்றம்

பட்டாக்கத்தியுடன் அச்சுறுத்திய ‘ரூட் தல’ மாணவர்: அதிரடி காட்டிய  உயர் நீதிமன்றம்

சென்னையில் உள்ள மறுவாழ்வு மைய ஊழியர்களுக்கு உதவியாக ஆறு நாட்கள் பணிபுரிய வேண்டும் என 'ரூட் தல' மாணவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை புறநகர் ரயில்கள் மற்றும் சென்னை மாநகர பேருந்துகளில் ‘ரூட் தல’ எனக் கூறி பயணிகளிடம் கத்தி மற்றும் கற்களைக் காட்டி மிரட்டி மாணவர்கள் அராஜகத்தில் ஈடுபடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்துகிறது. 

மாணவர்களுக்கிடையே ஏற்படும் ‘ரூட் தல’ மோதலால் வன்முறைகளும் நிகழ்கின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ‘ரூட் தல’ போன்று மாணவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டு வந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘ரூட் தல’ எனக் கூறிக் கொண்டு அராஜகத்தில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் வினோத முறையில் தண்டனை வழங்கியுள்ளது. சென்னையில் உள்ள மறுவாழ்வு மைய ஊழியர்களுக்கு ஆறு சனிக்கிழமைகளில் உதவியாக இருக்க வேண்டும் என அந்த மாணவருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in