நடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: வனத்துறையை எச்சரித்த உயர் நீதிமன்றம்!

நடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: வனத்துறையை எச்சரித்த உயர் நீதிமன்றம்!

நீலகிரியில் அடையாளம் காணப்பட்ட 191 இடங்களில் உள்ள அந்நிய மரங்களை முழுமையாக அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக வனப் பகுதிகளில் பரவிக்கிடக்கும் அந்நிய மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, நீலகிரி மாவட்டத்தில் 191 இடங்களில் அந்நிய மரங்கள் பரவி இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதில் 53 இடங்களில் அந்த அந்நிய மரங்களை அப்புறப்படுத்துவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 16 இடங்களில் இருந்த அந்நிய மரங்களை அகற்றி விற்பனை செய்ததன் மூலமாக நான்கு கோடியே 2 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மொத்தமுள்ள அனைத்து பகுதிகளிலும் இருக்கக்கூடிய அந்நிய மரங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளை 15 நாட்களில் முடித்து நான்கு வாரங்களில் டெண்டர் கோரி அவற்றை அகற்ற வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் எனவும் வனத்துறைக்கு எச்சரிக்கை விடுத்து வழக்கின் விசாரணையை டிசம்பர் 22-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இதேபோல மசினகுடி மற்றும் முதுமலை ஆகிய பகுதிகளில்  உள்ள அந்நிய மரங்களை  அகற்றுவது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டெண்டரை  இறுதி செய்து மரங்களை அகற்றும் பணியைத் தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு காகித நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் அது சம்பந்தமாக டிசம்பர் 22-ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in