பழநி முருகன் கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்த வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

பழநி முருகன் கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்த வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

பழநி முருகன் கோயில் குட முழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டுமென உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஜன.27-ல் நடைபெறவுள்ள பழநி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் தமிழக அரசிடம் வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில், பழநி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த நடவடிக்கை எடுக்கக்கோரி கரூரைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் விஷ்ணுகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. பழநி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை, விழா அழைப்பிதழ் ஆகியன தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து, பழநி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும்.

அது தொடர்பான நிலை அறிக்கையை குடமுழுக்கு விழா நிறைவுக்கு பின் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in