விதி மீறிய உயர்நீதிமன்ற நீதிபதியின் கார்; வீடியோ எடுத்து பதிவிட்ட நபர்: போலீஸ் நடவடிக்கை எடுத்ததா?

விதி மீறிய உயர்நீதிமன்ற நீதிபதியின் கார்; வீடியோ எடுத்து பதிவிட்ட நபர்: போலீஸ் நடவடிக்கை எடுத்ததா?
Updated on
1 min read

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வாகனம் போக்குவரத்து விதிகளை மீறி ஒரு வழி பாதையில் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோ ஆதாரங்களுடன் சென்னை போக்குவரத்து காவல்துறை சமூகவலைதள பக்கத்தை இணைத்து புகார் அளிக்கப்பட்டுள்ளது பேசும் பொருளாகியிருப்பது.

சென்னையில் போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு காவல்துறையின் சமூக வலைதள பக்கத்தை இணைத்து பொதுமக்கள் பலர் போக்குவரத்து விதிகளை மீறி செல்லும் வாகனங்கள் குறித்து புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் குறித்து புகார் அளித்து வருகின்றனர். இது போன்ற புகார்களை உடனுக்குடன் காவல்துறை தரப்பில் விசாரணை செய்து அபராதங்கள் விதிக்கப்பட்டு, செல்லான் புகைப்படத்தை சென்னை காவல்துறை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.

நடிகர் விஜய், காவல்துறை ஏடிஜிபி, அரசியல் பிரமுகர், என யாராக இருந்தாலும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமின்றி சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக காவல்துறையினர் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்ததன் அடிப்படையில், போலீஸார் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும், போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும் என தமிழக டிஜிபி கடந்த இரு தினங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் நேற்று மதியம் தேசியக்கொடி, மற்றும் அரசு முத்திரையுடன், கார் ஒன்று ஒருவழிப்பாதை வழியாக சென்றதை, வாகன ஓட்டி ஒருவர் தனது கார் கேமரா மூலம் வீடியோ எடுத்து அந்த வீடியோவை சென்னை காவல்துறை சமூக வலைதள பக்கத்தை இணைத்து நடவடிக்கை எடுக்கும்படி பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்பொழுது வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் அரசு வாகனம் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவது தெளிவாக தெரியும் நிலையில் என்ன பிரச்சினை இந்த வாகனத்தில் என சென்னை காவல்துறை பதிவிட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் உயர் நீதிமன்ற பதிவாளர் பெயரில் பதிவாகி இருப்பதும், இந்த வாகனம் நீதிபதி சத்திய நாராயண பிரசாத் பயன்படுத்தும் வாகனம் என்பதும் தெரிய வந்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி வாகனமே போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் விவாத பொருளாக மாறியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in