பராமரிப்பு பணம் கேட்ட பெற்றோர்; கொடுக்க மறுத்து மகன் சீராய்வு மனு: உயர்நீதிமன்றம் காட்டிய அதிரடி

பராமரிப்பு பணம் கேட்ட பெற்றோர்; கொடுக்க மறுத்து மகன் சீராய்வு மனு: உயர்நீதிமன்றம் காட்டிய அதிரடி

ஜீவனாம்சம் கோரும் மனுக்களை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டுமென குடும்பநல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த தம்பதி,  தங்கள் மகனிடம் பராமரிப்பு தொகை கோரி கடந்த 2014-ம் ஆண்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனு நிலுவையில் உள்ள நிலையில் பெற்றோருக்கு இடைக்காலநிவாரணமாக மாதம்  20 ஆயிரம் வழங்க 2018-ம் ஆண்டு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மகன் சீராய்வு மனுத் தாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம் கோரும் வழக்குகளை உரிய காலத்திற்குள் விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளன.

இந்த வழக்கு 2014-ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளதற்கு அதிருப்தி தெரிவித்தார். பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம் கோரி தாக்கலாகும் மனுக்களை உரிய காலத்துக்குள் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டுமென குடும்ப நல நீதிமன்றங்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இடைக்கால உத்தரவை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்ய முடியாது எனக் கூறி, மகனின் மனுவை தள்ளுபடி செய்தார். இந்த வழக்கை 3 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும். மேலும் கால அவகாசம் நீட்டிக்கக்கூடாது என சென்னை குடும்ப நல நீதிமன்றத்திற்கு தனது உத்தரவில் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in