போன் எடுக்காத மனைவி; மாடியிலிருந்து வீட்டிற்கு சென்றபோது கணவருக்கு நடந்த துயரம்: சந்தேகம் எழுப்பும் உறவுகள்

போன் எடுக்காத மனைவி; மாடியிலிருந்து வீட்டிற்கு சென்றபோது கணவருக்கு நடந்த துயரம்: சந்தேகம் எழுப்பும் உறவுகள்

மனைவி போன் எடுக்காத நிலையில், மாடி வழியாக வீட்டிற்கு செல்ல முயன்ற கணவர் கீழே விழுந்து உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே வசித்து வந்தவர் தென்னரசு. இவர் நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் காலிங் பெல் வேலை செய்யாததால், மனைவிக்கு பலமுறை போன் செய்துள்ளார். ஆனால் மனைவி போனை எடுக்கவில்லை. மாடியில் இருந்து வீட்டினுள் நுழைய பைப் வழியாக இறங்கியுள்ளார். அப்போது, கால் தவறி கீழே விழுந்துள்ளார் தென்னரசு.

இதையடுத்து, உறவினர்கள் கோவிந்தராஜ் மற்றும் வினோத் ஆகியோர் தென்னரசை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தென்னரசு உயிரிழந்தார். இதனிடையே, தென்னரசின் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், கோவிந்தராஜ் மற்றும் வினோத் ஆகிய இருவரும் அடித்து கொலை செய்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைத்த உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதோடு சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in