ஹலோ, வருமானவரித்துறையில் இருந்து பேசுறோம்: களமிறங்கிய மோசடி கும்பல்

ஹலோ, வருமானவரித்துறையில் இருந்து பேசுறோம்: களமிறங்கிய மோசடி கும்பல்

வங்கிக் கணக்கில் இருந்து தொகை, வரி அல்லது வேறு ஏதாவது ஒரு வகையில் பணம் செலுத்துவதற்கு இமெயில் அல்லது தொலைபேசி அழைப்பு வந்தால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் வருமான வரித்துறை பெயரில் பண மோசடி செய்யும் நோக்கில் வரும் இமெயில் மற்றும் கடிதங்களை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை கவனத்திற்கு வந்துள்ள நிலையில் தொலைபேசி அழைப்புகளும் தவறாக வருவதாக புகார் எழுந்துள்ளது.

அதனால் தங்களின் வங்கி கணக்கில் இருந்து ஏதாவது தொகை, வரிஅல்லது பணம் செலுத்துவது குறித்து இமெயில் அல்லது தொலைபேசி அழைப்புகள் வந்தால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறையின் www.tnincometax.gov.inஎன்ற இணையதளத்தில் உள்ள வருமான வரித்துறை இமெயில் முகவரி அல்லது தொலைபேசி எண் மூலமாக சரிபார்த்துக் கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ கடித பரிமாற்றம் அனைத்தும் DIN என்ற ஆவண அடையாள எண்ணைக் கொண்டிருக்கும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே மோசடி நபர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in