ஹலோ போலீஸ் ஷ்டேஷனா, எங்க அம்மாவைக் கொன்னுட்டேன்: பதற வைத்த 16 வயது சிறுவன்

ஹலோ போலீஸ் ஷ்டேஷனா, எங்க அம்மாவைக் கொன்னுட்டேன்: பதற வைத்த 16 வயது சிறுவன்
Barsha Mishra

தனது தாயைத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த 16 வயது சிறுவன், அதுகுறித்த தகவலை காவல் நிலையத்திற்கு போன் செய்து தெரிவித்த சம்பவம் மத்திய பிரதேச போலீஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் திகம்கர் நகர் பாரத்நகர் காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ் ராஜக். இரவு நேர காவலாளியான இவர் அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், ரமேஷ் ராஜக் வெளியூர் சென்றிருந்தார்.

இந்த நிலையில் திகம்கர் நகர் காவல் நிலையத்திற்கு ஒரு போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர், தனது தாயைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து விட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். ரமேஷ் ராஜக்கின் 16 வயது இளையமகன் தான் காவல் நிலையத்திற்கு போன் செய்தது போலீஸாருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், சிறுவனின் தாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதன் பின் சிறுவனைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது தனது தந்தையின் துப்பாக்கியால் தாயைச் சுட்டுக் கொன்றதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து அவரிடமிருந்து துப்பாக்கியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், " தனது தாய் தன்னிடம் அன்பாக இல்லை என்ற கோபம் சிறுவனுக்கு நீண்ட நாட்களாக இருந்துள்ளது. தனது அண்ணனிடம் பாசம் காட்டும் தாய், தன்னிடம் பாசம் காட்டவில்லை என்று அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இதன் காரணமாக அவருக்கு சிறிது மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும் அடிமையாக இருந்த சிறுவன், தனது தாயைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்" என்றனர். 16 வயது சிறுவன் தாயைச் சுட்டுக்கொலை செய்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in