கனமழையால் குளமான ரயில்வே சுரங்கப்பாதை; சிக்கிய பள்ளி வாகனம்: அலறித்துடித்த குழந்தைகளால் அதிர்ச்சி

கனமழையால் குளமான ரயில்வே சுரங்கப்பாதை;  சிக்கிய பள்ளி வாகனம்: அலறித்துடித்த குழந்தைகளால் அதிர்ச்சி

கோவில்பட்டியில் இன்று மாலை பெய்த கனமழையில் ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதில் மாலை பள்ளிமுடிந்து குழந்தைகளை ஏற்றிவந்த பள்ளி வாகனம் ஒன்று சிக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இளையரசேனந்தல் ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீரானது குளம்போல் தேங்கியது. அந்த வழியாக வந்த ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி தனியார் பள்ளி வாகனம் தேங்கிக் கிடந்த மழைநீரில் சிக்கிக் கொண்டது. குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரில் முன்னும், பின்னும் நகரமுடியாமல் பள்ளி வேன் சிக்கிக்கொண்ட சம்பவம் உள்ளே இருந்த குழந்தைகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்கள் பயந்து அழுதனர்.

குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியாக வந்த பொதுமக்கள் அவர்களே மீட்புக் குழுவினரைப் போல் குழந்தைகளை மீட்டனர்.

மழைநீர் வடிந்துஓடும் வகையில் முறையாக இந்த சாலை அமைக்கப்படாததால் அடிக்கடி வாகனங்கள் சிக்கிக் கொள்வதும் தொடர்கதையாக நடந்துவருகிறது. மழைநேரங்களில் அடிக்கடி இந்த சாலை முடங்குவதால் போதிய முன்னேற்பாடு வசதிகள் செய்யப்பட வேண்டும் என்பதே கோவில்பட்டி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in