தமிழ்நாட்டில் இந்த மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை: அலர்ட் கொடுத்த ஆய்வு மையம்!

கனமழை அறிவிப்பு
கனமழை அறிவிப்புதமிழ்நாட்டில் இந்த மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை: அலர்ட் கொடுத்த ஆய்வு மையம்!
Updated on
1 min read

நீலகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்," நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும். ஈரோடு, தேனி, தென்காசி, திருநெல்வேலியில் இன்று முதல் (ஏப்.29) 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மே மாதம் 1-ம் தேதி மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, சேலம், நாமக்கல், கரூர், தருமபுரியில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in