நேபாளத்தை நிலைகுலைய வைத்த கனமழை: திடீர் நிலச்சரிவால் 13 பேர் பலி

நேபாளத்தை நிலைகுலைய வைத்த கனமழை: திடீர் நிலச்சரிவால்  13 பேர் பலி

நேபாளத்தில் இன்று பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

மேற்கு நேபாளத்தில் அச்சாம் மாவட்டத்தில் இன்று காலை கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கிய 20 பேரில் 10 பேர் மீட்கப்பட்டனர். மற்ற 10 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணியிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுவரை நிலச்சரிவில் சிக்கி படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அச்சாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிக்காக ஹெலிகாப்டர்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in